M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: கடந்த ஞாயிற்று கிழமை இஸ்ரேலிய அமைச்சரவையில் உரையாற்றியுள்ள அதன் பிரதமர் நெதன்யாகு ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகராகவும் அதன் பிரிக்கமுடியாத அங்கமாக இருக்கும் என்று தெரிவித்து இஸ்ரேலின் சியோனிச கொள்கையை உறுதிப் படுத்தியுள்ளார் 1948 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு ஜெருசலத்தை கைப்பற்றியது அங்கிருந்த ஏழு இலட்சம் முஸ்லிம்களை வெளியேற்றியது ஜெருசலத்தின் மேற்கு பகுதி முழுவதும் யூத குடியேற்றங்களால் நிறைக்கப்பட்டது.
அல் குத்ஸ் மஸ்ஜித் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலம் படிப்படியாக யூத குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது அங்கிருந்து பலஸ்தீனர்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர் அல்குத்ஸ் மஸ்ஜிதை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேல தற்போது நகர அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் பலஸ்தீனர்களை பலவந்தமாக வெளியேற்றி வருகின்றது
விரிவாக